Published : 29 Jan 2025 02:41 AM
Last Updated : 29 Jan 2025 02:41 AM

இரவு 11 மணிக்குப் பிறகு  சிறுவர்களை திரையரங்கில் அனுமதிக்கக்கூடாது: தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு

படம்: Grok AI

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்​படத்​தின் டிக்​கெட் விலை உயர்த்​தப்​பட்டது தொடர்பாக தெலங்​கானா உயர் நீதி​மன்​றத்​தில் விஜய் கோபால் என்பவர் மனு தாக்கல் செய்திருந்​தார்.

அதில் அவர் கூறிருப்​ப​தாவது: திரையரங்​கு​கள், மல்ட்​டிபிளக்ஸ் திரையரங்​கு​களில் இரவு 1.30 மணி வரை திரைப்​படங்கள் திரை​யிடப்​படு​கின்றன. இதனால் சிறு​வர்​களின் உடல்​நிலை​யிலும், மனநிலை​யிலும் எதிர்​மறைவு விளைவுகள் ஏற்படும். எனவே, திரையரங்​கு​களில் இரவு 11 மணிக்​குப் பிறகு சிறு​வர்களை அனும​திக்​கக்​கூடாது. இவ்வாறு அதில் கூறி​யிருந்​தார்.

மனுவை விசா​ரித்த தெலங்​கானா உயர் நீதி​மன்​றம், திரையரங்​கு​கள், மல்ட்​டிபிளெக்ஸ்​களில் காலை 11 மணிக்கு முன்​பும், இரவு 11 மணிக்​குப் பிறகும் 16 வயதுக்​குட்​பட்ட சிறு​வர்கள் வருவதை ஒழுங்​குபடுத்துவது குறித்து சம்பந்​தப்​பட்​ட​வர்​களுடன் கலந்​தாலோ​சித்து, அறிவுறுத்​தல்களை வழங்​கு​மாறு மாநில அரசுக்கு உத்தர​விட்​டது. அதுவரை இரவு 11 மணிக்​குப் பிறகு 16 வயதுக்​குட்​பட்ட சிறு​வர்களை தியேட்​டர்​களில் அனு​ம​திக்​கக்​கூடாது என்​றும் நீ​தி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x