Published : 27 Jan 2025 01:20 AM
Last Updated : 27 Jan 2025 01:20 AM

டெல்லி அணி வகுப்பில் முதல் முறையாக 3 அரசு பள்ளி பேண்ட் இசை குழு பங்கேற்பு

கோப்புப்படம்

புதுடெல்லி: குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட அணிவகுப்பில், முதல் முறையாக 3 அரசு பள்ளி பேண்ட் இசைக் குழு இடம் பெற்றது.

பள்ளி பேண்ட் இசைக் குழுக்களுக்கான தேசியளவிலான போட்டி, டெல்லி மேஜர் தியான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் கடந்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்றன. இதன் இறுதி போட்டியில் 16 பள்ளிகளைச் சேர்ந்த பேண்ட் இசைக் குழுக்கள் பங்கேற்றன.

இவற்றிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்தின் படாம்டா நகரில் உள்ள ஸ்ரீ கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா மாணவிகளின் பைப் பேண்ட் குழு , சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த அரசு மேல் நிலைப் பள்ளி பேண்ட் குழு , கர்நாடகா மாநிலம் பெலகாவியில் உள்ள கேந்திரிய வித்தியாலயா மாணவர்களின் பைப் இசைக் குழு தேர்வு செய்யப்பட்டு டெல்லி குடியரசு தினவிழா அணி வகுப்பி்ல் நேற்று பங்கேற்றன. இந்த 3 பள்ளிகளுமே அரசு பள்ளிகள். டெல்லி குடியரசு தினவிழா அணி வகுப்பில் 3 அரசு பள்ளிகளின் பேண்ட் குழு இடம் பெற்றது இதுவே முதல் முறை. இவர்கள் அனைவரது பாராட்டையும் பெற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x