Published : 24 Jan 2025 08:13 AM
Last Updated : 24 Jan 2025 08:13 AM
புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்குவேன். வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக என்னுடைய குழுவினர் ஒரு விரிவான திட்டத்தை தயாரித்து வருகின்றனர். மக்கள் ஆதரவுடன் டெல்லியில் அடுத்த 5 ஆண்டுகளில் வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு அமைந்த 2 ஆண்டுகளுக்குள் 48 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் துறையில் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT