Published : 21 Dec 2024 02:16 AM
Last Updated : 21 Dec 2024 02:16 AM

ம.பி.யில் கான்ஸ்டபிள் வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல்: கேட்பாரற்று கிடந்த காரில் ரூ.40 கோடி தங்கம்

கோப்புப் படம்

போபால்: ம.பி.​யில் பல்வேறு இடங்​களில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீ​ஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்​றனர்.

இந்நிலை​யில், போபாலின் மிண்​டோரி வனப் பகுதி​யில் கேட்பாரற்று கிடந்த காரில் இருந்து 52 கிலோ தங்கத்தை நேற்று பறிமுதல் செய்​தனர். போபாலில் திரிசூல் கன்ஸ்ட்ரக் ஷன், குவாலிட்டி குரூப், இஷான் குரூப் உட்பட 51 இடங்​களில் வருமான வரித் துறை​யினர் நடத்திய சோதனை​யில் இந்தத் தங்கம் கண்டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. கேட்பாரற்று கிடந்த கார் போலீ​ஸாரால் தேடப்​படும் பில்டர் ஒருவரின் பெயரில் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

அதேபோல் போபால் அரேரா காலனி​யில் வசிக்​கும் சவுரப் சர்மா என்பவர் வீட்​டில் ரூ.2.5 கோடி ரொக்​கம், தங்கம், வெள்ளி, சொத்து ஆவணங்களை லோக் ஆயுக்தா சிறப்பு போலீ​ஸார் நேற்று பறிமுதல் செய்​தனர். இவர் ம.பி. சாலை போக்கு​வரத்​துத் துறை போலீஸ் கான்ஸ்​டபிளாக பணியாற்றினார். கடந்த ஆண்டு​தான் விஆர்எஸ் கொடுத்து​விட்டு ஓய்வு பெற்​றார். இந்நிலை​யில், போபால் பிரிவு லோக் ஆயுக்தா சிறப்பு போலீ​ஸார் சர்மா வீட்​டில் நேற்று திடீரென சோதனை நடத்​தினர்.

இதுகுறித்து லோக் ஆயுக்தா ஏடிஜி ஜெய்​தீப் பிரசாத் கூறிய​தாவது: சவுரப் சர்மா கான்ஸ்​டபிள் பணியில் இருந்து விஆர்எஸ் வாங்கிய பிறகு, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்​டுள்​ளார். அவரது வீட்​டில் சோதனை நடத்திய போது, ரூ.2.5 கோடி ரொக்கப் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்​யப்​பட்டன.

அவருடைய உதவி​யாளர் சந்தன் சிங் கவுர் வீட்​டிலும் சோதனை நடந்​தது. ரியல் எஸ்டேட் மட்டுமன்றி, ஓட்டல், பள்ளி போன்​வற்றி​லும் அவர் முதலீடுகள் செய்​துள்ளது தெரிய வந்துள்ளது. கான்ஸ்​டபிளாக 12 ஆண்டுகள் பணியில் இருந்​துள்ளார். அந்தக் காலக் கட்டத்​தி​லும் அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்​டுள்ளது கண்டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. போபால் மட்டுமன்றி ம.பி.​யின் பல நகரங்​களி​லும் அவருக்கு சொத்து​கள் உள்ளன. இவ்​வாறு லோக் ஆ​யுக்தா ஏடிஜி ஜெய்​தீப் பிரசாத்​ கூறினார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x