Published : 20 Aug 2014 08:55 AM
Last Updated : 20 Aug 2014 08:55 AM
தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கணவர் அண்டை வீட்டு பெண்ணை பலாத் காரம் செய்த சம்பவம் பெங்களூ ரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. இவ்வழக்கில் கணவன்,மனைவி இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக பெங்களூர் மேற்கு காவல்துறை இணை ஆணையர் கூறியதாவது: ' பெங்களூரில் உள்ள ஜாலஹள்ளி பகுதியில் வசிப்பவர் திலீப் (29).இவருடைய மனைவி ஆஷா (25).திலீப் இப்பகுதியில் கேபிள் ஆபரேட்டராக வேலை செய்கிறார்.இவர்களுடைய அண்டை வீட்டில் மீனா(26) என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
அண்டை வீடுகளில் வசிப்பதால் மீனாவும், ஆஷாவும் நெருங்கிய தோழிகளாக மாறியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் மீனா ஆஷாவிடம் தான், நீலப் படம் பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.ஆஷா தனது கணவர் மூலமாக நீலப்பட சிடி வாங்கி வரச்சொல்லி கொடுத் திருக்கிறார். யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் ஆஷாவும், மீனாவும் சேர்ந்து நீலப்படங்களை பார்த்துள்ளனர். இதனை தனது கணவரிடமும் ஆஷா தெரிவித் துள்ளார்.
இதனிடையே கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு மீனாவை,ஆஷா தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.அப்போது வீட்டை விட்டு வெளி யேறிய அவர் கதவை வெளிப் புறமாக பூட்டியுள்ளார். மேலும் தனது கணவர் திலீப் மீனாவை பாலியல் பலாத்காரம் செய்வதை ஜன்னல் வழியாக ஆஷா கண்டு ரசித்துள்ளார். இதனை கணவனும் மனைவியும் திட்டமிட்டே நிறை வேற்றியுள்ளனர். இதனை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்றும் மீனாவை மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்த மீனா,சில நாட்கள் வெளியூருக்கு சென்று விட்டார். கடந்த சனிக்கிழமை வீடு திரும்பிய மீனாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த மீனா சத்தம் போட்டுள்ளார்.இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே சண்டை எற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மீனா கங்கமனகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து திலீப், ஆஷா இரு வரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தப்பட்டு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர், என்றார். இச்சம்பவத் தால் பெங்களூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
`பேராபிலியா' என்றால் என்ன?
சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் சச்சிதானந்தன் கூறியதாவது: இயல்புக்கு மாறாக இல்லற சுகம் அடைவது பேராபிலியா நோய் என்று அழைக்கப்படுகிறது. இதில் பல்வேறு வகைகள் உள்ளன. மேற்கூறிய பெண் வாயூரிசம் என்ற வகை பாலியல் சார்ந்த நோய்க்கு உள்ளாகியிருப்பதாக தெரிகிறது. இந்த நோய் உடையவர்கள், மற்றவர்கள் நிர்வாண நிலையில் இருக்கும்போது, அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக பார்த்து ரசிக்கும் இயல்பு உடையவர்கள். இவ்வாறு செய்யும்போது, அவர்களுக்கு ஒரு வித சந்தோஷம் ஏற்பட்டு, முழுமையான இல்லற சுகம் அடைந்த திருப்தி அடைவார்கள். ரகசியமாக பார்க்கும்போது அவர்களே உறவில் ஈடுபடுவது போன்று கற்பனை செய்துகொள்வார்கள். இச்செயல்களில் ஈடுபடும் பெண்கள், அவர்களின் கணவரிடம் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத நிலையில், இதுபோன்ற பாலியல் சார்ந்த நோய்க்கு ஆளாகிறார்கள் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT