Published : 08 Aug 2014 10:41 AM
Last Updated : 08 Aug 2014 10:41 AM
சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை தமிழக அரசே தாமதப்படுத்துவதாக, மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்கு வரத்துத் துறை இணை அமைச்சர் கிருஷண்பால் குர்ஜர் மாநிலங்கள வையில் புகார் கூறியுள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு எழுத்து மூலமாக புதன்கிழமை அளித்த பதிலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் குர்ஜர் தமது பதிலில் கூறியிருப்பதாவது: சென்னை துறைமுகம்-மதுர வாயல் இடையிலான பறக்கும் அதிவேக சாலைத் திட்டம் கடந்த 2009-ல் தொடங்கப்பட்டது. ஜூலை 2013-க்குள் முடிக்க திட்டமிடப்பட் டது. ஆனால் இப்போது வரை இந்தத் திட்டத்தில் 14.79 சதவிகிதப் பணிகளே முடிந்துள்ளன.
இந்தத் திட்டம் தாமதமாவ தற்கு தமிழக அரசே காரணம். திட்டத்துக்கான நிலம் கையகப்ப டுத்துதல், திட்டம் நடைபெறும் இடங்களில் வசிக்கும் மக்களுக் கான புனர்வாழ்வு, அவர்களுக் கான மறுகுடிய மர்த்தல் ஆகிய பணிகளை மாநில அரசு தாமதப்படுத்தி வருகிறது.
மேலும் இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் மாநில அரசின் ஒப்புதல் மறுக்கப்பட்டு வருவதா லும் இந்தத் திட்டம் தொடர்ந்து தாமதமாகிவருகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரயில் அமைச்சர் பதில்
தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள் தொடர்பான கனிமொழி யின் மற்றொரு கேள்விக்கு மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ‘சென்னை பேசின் பிரிட்ஜ் மற்றும் எழும்பூ ரில் ரயில் பராமரிப்பு நிலையங் களைத் தரம் உயர்த்தும் திட்டம் 5.17 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வரும் 2015 மார்ச் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது’, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT