Published : 10 Jul 2014 10:49 AM
Last Updated : 10 Jul 2014 10:49 AM
பாஜக எம்.பி. கிரிராஜ் வீட்டில் 1.14 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்தப்பணத்துக்கான ஆதாரம் என்ன, அது கருப்புப் பணமா என விசாரிக்க வேண்டும் எனக்கோரி, பிஹார் சட்டசபையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த 7-ம் தேதி பாட்னாவில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆட்டோவில் வந்த நான்கு பேரிடம் விசாரித்ததில் அவர்கள் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.1.14 கோடி, 600 அமெரிக்க டாலர்கள், தங்க நகைகளைக் கைப்பற்றினர்.
அந்தப் பணம் மற்றும் நகைகள் பாஜக எம்.பி கிரிராஜ் சிங் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டவை என கொள்ளையர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அதிக அளவில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அது கருப்புப் பணமா என விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், எம்.பி. பதவி பறிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
புதன்கிழமை நடைபெற்ற பிஹார் சட்டசபையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் எம்எல்ஏ.க் கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கிரிராஜுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ரோடாஸ் மாவட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 2 இளைஞர் கள் பலியானதற்கு கண்டனம் தெரிவித்து அவையின் மையப்பகு திக்கு வந்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைய டுத்து, அவைத்தலைவர் உதய் நாராயண் சவுத்ரி அவையை மதியம் 2 மணி வரை ஒத்தி வைத்தார்.
இது தொடர்பாக முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி செய்தியாளர் களிடம் கூறும்போது, “கிரிராஜ் சிங் வீட்டில் அதிக பணம், அமெரிக்க டாலர்கள் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். அதிக தொகை கைப்பற்றப்பட்டது தொடர்பாக பாட்னா போலீஸாரும் வருமான வரித் துறையினரும் விசாரித்து வருகின்றனர். வேறுவகையிலான விசாரணை தேவையெனில் அதற்கும் உத்தரவிடப்படும்” என்றார்.
முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார், ராப்ரி தேவி உள்ளிட் டோர் அதிக அளவு பணம் கைப்பற்ற ப்பட்டிருப்பது தங்களுக்கு ஆச்சரி யமளிக்கிறது எனக் கூறியுள்ளனர்.
“திருடு போன பொருள்கள் தனது உறவினருடையது என கிரிராஜ்சிங் கூறியிருப்பது, தப்பித்துக் கொள்ளும் செயல். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் விலங்குகள் நலத்துறை அமைச்சராக இருந்தபோது அவை முறைகேடாகச் சம்பாதித்தி ருக்கப்பட வேண்டும்” என்று ராப்ரி தேவி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT