Published : 27 Jul 2014 10:26 AM
Last Updated : 27 Jul 2014 10:26 AM

பெண்ணை மிரட்டி காவலர் பலாத்காரம்: வீடியோ காட்சி மூலம் அம்பலம்

ஆந்திரப் பிரதேசத்தில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணை காவலர் ஒருவர் மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது தொடர்பான வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேற்கு கோதாவரி மாவட்டம் ஜிகுலு மில்லி காவல் நிலையத்தில் காவலராக (கான்ஸ்டபிள்) பணியாற்றுபவர் சதீஷ். கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், குடும்பத் தகராறு தொடர்பாக புகார் தெரிவிக்க காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அந்த பெண்ணை மிரட்டிய சதீஷ், அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்போவதாக மிரட்டினார். அதனால் அச்சமடைந்த அந்த பெண்ணை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பிற்கு அந்த பெண்ணை அடிக்கடி அழைத்துச் சென்று சதீஷ் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.

அச்சம் காரணமாக, இந்த விஷயத்தை அந்த பெண் யாரிடமும் கூறாமல் இருந் துள்ளார்.

ஆனால், சதீஷுக்கு வேண்டாத சிலர், இந்த காட்சிகளை செல்போன் மூலம் வீடியோ எடுத்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.

ஏற்கெனவே, இதேபோன்று சதீஷின் கொடுமை தாங்காமல் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சதீஷ் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த பங்காரெட்டி கூடம் டி.எஸ்.பி சுப்பாராவ் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x