Published : 09 Jul 2014 10:22 AM
Last Updated : 09 Jul 2014 10:22 AM

கூடுதல் பளு சுமத்தும் பட்ஜெட்: மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

பட்ஜெட் கணக்கீடு எதுவும் இல்லாமல், புல்லட் ரயில், தனி சரக்கு ரயில் பாதைகள் என வெறும் வார்த்தைகளே அலங்கரிக் கின்றன. அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதிலும், பொதுத்துறை -தனி யார்துறை கூட்டு முயற்சி மூலம் நவீனமயமாக்கல், விரிவாக் கத்தை மேற்கொள்ளவுமே பட்ஜெட்டில் முழு அழுத்தம் தரப்பட்டுள்ளது.

பட்ஜெட்டுக்கு முன் உயர்த்தப் பட்டதன் மூலம் ஏற்கனவே விழுந்த ரூ.8,000 கோடி சுமைக்கு மேலாக, எதிர்காலத்தில் எரிபொருள் விலையை சார்ந்ததாகவே கட் டணம் இருக்கும் என்று கூறப் பட்டுள்ளதால், எரிபொருள் விலை ஏறும் போதெல்லாம் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கும் என்று பொருளாகிறது.

விமான நிலையங்கள், துறைமு கங்கள் போன்றவற்றில் கட்ட மைப்புத்திட்டங்களில் பொது-தனியார் கூட்டு முயற்சி, நேரடி அந்நிய முதலீடுகளால் பயனாளி களின் செலவினங்கள் அதிகரிப் பதைத்தான் கண்டுள்ளோம்.எனவே, ரயில்வே துறையிலும் மக்கள் மீது சுமை விழும் நிலைமைதான் ஏற்படும்.

இந்த பட்ஜெட் இந்திய ரயில்வே துறையை தனியார்மய மாக்கும் முயற்சியாகும். சமூகப் பொறுப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளை இணைப்பது ஆகிய வற்றுக்கு விடை கொடுக்கப்பட் டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் 99 புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் ஒரே ஒரு திட்டம்தான் நிறைவேறியுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். இத்துறையில் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவது குறித்து எந்தவிதமான திட்டத்தையும் அமைச்சர் அறிவிக்கவில்லை.

மொத்தத்தில் இந்த அரசு, ரயில்வேதுறையில் நேரடி அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கும், பெருமளவில் தனியார் மயமாக்கு வதற்கும் அழுத்தம் தருகிறதே தவிர நாட்டுக்கும், பொருளா தாரத்திற்கும், மக்களுக்கும் தேவையான வகையில் ரயில்வே யின் திறனை மேம்படுத்துவதில் அரசுக்கு உள்ள பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x