Published : 05 Jun 2023 06:54 AM
Last Updated : 05 Jun 2023 06:54 AM
புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட டிக்கெட் எடுக்காத பயணிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்ற ரயில்வே துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய பயணிகள் டிக்கெட் எடுக்காமல் பயணித்திருந்தாலும் அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். மருத்துவமனையில் உறவினர்கள் உதவியின்றி சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவிட அரசு சார்பில் ஒருவர் உடன் உள்ளார்.
மேலும், 139 என்ற ஹெல்ப்லைன் எண் மூலம் மூத்த ரயில்வே அதிகாரிகள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த அல்லது இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எங்களை தொடர்பு கொண்டால் அவர்கள் நேரில் வர ஏற்பாடுகள் செய்யப்படும். பயணம் மற்றும் பிற செலவுகளை நாங்களே கவனித்துக்கொள்வோம். இவ்வாறு அமிதாப் கூறினார்.
உடனடி நிவாரணம்: ரயில் விபத்துக்கான இழப்பீடு உடனடியாக வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று ரயில்வே கூறியுள்ளது. அதன்படி, இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம், சிறிய காயங்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.3.22 கோடி ரூபாய் நிவாரணத்தை ரயில்வே வழங்கியுள்ளது. சோரோ, காரக்பூர், பாலாசோர், கந்தபாரா, பத்ரக், கட்டாக் மற்றும் புவனேஷ்வர் ஆகிய ஏழு இடங்களில் இழப்பீட் டுத் தொகையை இந்திய ரயில்வே வழங்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT