Published : 03 Jun 2023 12:03 PM
Last Updated : 03 Jun 2023 12:03 PM
புவனேஸ்வர்: 238 பேரை பலிகொண்ட ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக நாடு முழுவதும் 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 39 ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு மற்றோரு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஒடிசாவின் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே ரயில்கள் மோதிய இந்த விபத்தில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து எதிரொலியாக 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 39 ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்-கொல்கத்தா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22641), பெங்களூரு-கௌஹாத்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12509), ஹவுரா-திருப்பதி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (20889) உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி- திப்ருகர் விவேக் எக்ஸ்பிரஸ் (22503), ஹவுரா-மைசூரு எக்ஸ்பிரஸ் (22817) ஆகிய ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முழுமையான பட்டியல்:
திருப்பி விடப்பட்ட ரயில்களின் முழு பட்டியல்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT