Published : 14 Oct 2025 05:56 AM
Last Updated : 14 Oct 2025 05:56 AM

பசுமை மின்சாரம் உற்பத்தி திறனில் தமிழகத்துக்கு பின்னடைவு

சென்னை: சுற்​றுச்​சூழலை பாது​காக்​க​வும், நிலை​யான மின் உற்​பத்​தியை உறுதி செய்​ய​வும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி ஆதா​ரங்​கள் வாயி​லாக மின்​சா​ரம் உற்​பத்தி செய்ய, அனைத்து மாநிலங்​களுக்​கும், மத்​திய அரசு வலி​யுறுத்தி வரு​கிறது.

அனைத்து மாநிலங்​களும் சூரியசக்தி மின் நிலையங்கள், காற்​றலைகள், நீர்​மின் நிலை​யங்​களை அமைத்​து, மாநிலத்​தின் பசுமை மின்​சார உற்​பத்தி திறனை அதி​கரித்து வரு​கின்​றன. இந்த மின்​நிலை​யங்​களை மாநிலங்​களின் மின்​வாரி​யங்​களும், தனி​யார் நிறு​வனங்​களும் அமைத்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், மாநிலம் வாரி​யாக பசுமை மின்​சார உற்​பத்தி திறன் விவரங்​களை, மத்​திய அரசின் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறை அமைச்​சகம் வெளி​யிட்டு வரு​கிறது. இந்​தாண்டு ஜன.31-ம் தேதி நில​வரப்​படி, ஒட்​டுமொத்த புதுப்​பிக்​கத்​தக்க மின் உற்​பத்தி திறனில் ராஜஸ்​தான் முதலிடம், குஜ​ராத் 2-வது இடம், தமிழகம் 3-வது இடம், கர்நாடகா 4-வது, மஹா​ராஷ்டிரா 5-வது இடத்​தி​லும் இருந்​தன.

தற்​போது செப்​டம்​பர் நில​வரப்​படி மின்​நிறுவு திறன் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதில், முதல் இரண்டு இடங்​களில் இருந்த ராஜஸ்​தான், குஜ​ராத் எந்த மாற்​ற​முமின்றி தொடரும் நிலை​யில், 3-வது இடத்​தில் இருந்த தமிழகம் 4-வது இடத்​துக்​கும், கர்​நாடகா 5-வது இடத்​துக்​கும் சென்​றது. 5-வது இடத்​தில் இருந்த மஹா​ராஷ்டிரா 3-வது இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளது.

இந்​தாண்டு ஜனவரி நில​வரப்​படி, தமிழகத்​தின் திறன் 24,333 மெகா​வாட் ஆகவும், மஹா​ராஷ்டி​ரா​வின் திறன் 20,982 மெகா​வாட் ஆகவும் இருந்​தது. செப்​டம்​பர் நில​வரப்​படி, மஹா​ராஷ்டிரா 27,674 மெகா​வாட், தமிழகம் 26,588 மெகாவாட், கர்​நாடகா 25,499 மெகாவாட் திறனிலும் உள்ளன. மஹா​ராஷ்டிரா, தமிழகம், கர்​நாடகா ஆகிய 2 மாநிலங்​களை​யும் பின்​னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்​னேறி​யுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x