Published : 09 Sep 2025 05:22 PM
Last Updated : 09 Sep 2025 05:22 PM
மதுரை: தென்காசி மாவட்டத்தில் அடர்வனம் அருகே உள்ள 350 ஏக்கர் பட்டா நிலத்தில் மரங்கள் வெட்ட தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கல்லத்திகுளம் கலா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆலங்குளம் தாலுகா மாறாந்தை கல்லத்தி குளம் கிராமத்தில் 350 ஏக்கர் நிலத்தில் உள்ள சுமார் 8 லட்சம் அரிய வகை மரங்கள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன். இந்த மரங்களை சோலார் கம்பெனி அமைப்பதற்காக தனியார் நிறுவனம் அகற்றி வருகிறது. இதற்கு தடை விதித்து, 350 ஏக்கர் காடுகளை அரசு கையகப்படுத்தி, நிலத்தை காவல் குட்டி பரம்பை அடர் வனப் பகுதியுடன் சேர்க்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் இ.பினேகாஸ், ந.அர்ஜூன்குமார் வாதிட்டனர். அரசு தரப்பில் பிளீடர் திலக் குமார் வாதிடுகையில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடம் தனியார் பட்டா நிலம் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் ஒரு வராத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு செப்.16-ம் தேதி வரை மரங்கள் மற்றும் மான் உள்ளிட்ட விலங்குகளை அழிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT