Published : 02 Sep 2025 05:53 AM
Last Updated : 02 Sep 2025 05:53 AM

விநாயகர் சிலை கரைப்பால் கடற்கரைகளில் கரை ஒதுங்கிய 140 டன் கழிவுகள் அகற்றம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அடுத்து சென்னையில் எண்ணூர் முதல் நீலாங்கரை வரை ஏராளமான விநாயகர் சிலைகள் நேற்று முன்தினம் கடலில் கரைக்கப்பட்டன. இதனால் மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகள் டன் கணக்கில் கடற்கரையோரம் ஒதுங்கின. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: சென்​னை​யில் விநாயகர் சிலை கரைப்​பால் கடற்​கரைகளில் 2 நாட்​களாக கரை ஒதுங்​கிய 140 டன் கழி​வு​கள் அகற்றப்பட்​டன. நாடு முழு​வதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ம் தேதி கோலாகல​மாக கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, சென்னை மாநகரில் 1800-க்​கும் மேற்​பட்ட விநாயகர் சிலைகள் பிர​திஷ்டை செய்து வழி​பாடு நடத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், பலத்த பாது​காப்​புடன் விநாயகர் ஊர்​வலம் நேற்று முன்தினம் ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற்​றது. சிலைகளை கரைக்க சென்னை​யில் பட்​டினப்​பாக்​கம் - சீனி​வாசபுரம், காசி மேடு மீன்​பிடி துறை​முகம், திரு​வொற்​றியூரில் உள்ள பாப்​புலர் எடைமேடை பின்​புறம் மற்​றும் யுனிவர்​சல் கார்​போரண்​டம் தொழிற்​சாலைக்கு பின்​புறம், நீலாங்​கரை- பல்​கலைநகர், எண்​ணூர்- ராமகிருஷ்ணா நகர் ஆகிய 6 இடங்​களில் மட்​டுமே அனு​ம​திக்​கப்​பட்​டது.

சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களி​லிருந்து வாக​னங்​களில் விநாயகர் சிலைகள் ஏற்றி வரப்​பட்டு ராட்சத கிரேன்​கள் மூலம் தூக்​கிச் சென்று கடலில் பாது​காப்​பாக கரைக்​கப்​பட்​டன. அவ்​வாறு கடலில் கரைக்​கப்​பட்ட சிலைகளி​லிருந்து மரக்​கட்​டைகள் உள்​ளிட்​டவை 2 நாட்​களாக கரை ஒதுங்கி வரு​கின்​றன.

இவற்றை அகற்​றும் பணி​யில் 100-க்​கும் மேற்​பட்ட மாநக​ராட்சி தூய்​மைப் பணி​யாளர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டனர். அவர்​கள் கடந்த 2 நாட்​களாக மொத்​தம் 140 டன்கழி​வு​களை அகற்​றி​யுள்​ளனர். அதி​கபட்​ச​மாக மெரினா லூப் சாலை​யில் 49 டன், சீனி​வாசபுரம் பகு​தி​யில் 43 டன் கழி​வு​கள் அகற்​றப்​பட்​ட​தாக மாநக​ராட்சி நிர்​வாகம்​ தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x