Published : 30 May 2024 02:34 PM
Last Updated : 30 May 2024 02:34 PM

குன்னூர் அருகே குடியிருப்புப் பகுதியில் உலா வந்த 3 கரடிகளால் பொதுமக்கள் அச்சம்

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் கரடிகள்

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவை உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

குன்னூர் அருகேயுள்ள ஓட்டுப்பட்டறைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதியில் உலா வந்த 3 கரடிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே குன்னூரில் உலா வந்த ஒற்றை கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். ஆனால், அந்தக் கரடி சிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது 3 கரடிகள் உலா வந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x