Published : 21 Apr 2023 06:15 AM
Last Updated : 21 Apr 2023 06:15 AM
புதுச்சேரி: புதுவை கல்வித்துறை தொடக்கக் கல்வி துணை இயக்குநர் முனுசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பாண்டு கோடை விடுமுறையில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் ஜவகர் சிறுவர் இல்லம், குழந்தைகளுக்கு நடனம் (பரதம், கிராமியம்), வாய்ப்பாட்டு, வயலின், வீணை, மிருதங்கம், ஓவியம், கைவினை, கிதார், கீபோர்டு, டிரம்ஸ், கையெழுத்து பயிற்சி, விளையாட்டு (கேரம், செஸ், இறகுபந்து, டேபிள் டென்னிஸ்) கற்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6 வயது நிறைவடைந்தோர் முதல் 16 வயதுள்ள புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பயிற்சியில் பங்கேற்கலாம். சிறப்பு பயிற்சிகள் வரும் 24 முதல் 31-ம் தேதி வரை காலை 9.30 முதல் பிற்பகல் 12.30 வரை (ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் நீங்கலாக) நடக்கும்.
இப்பயிற்சி புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லம், லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி, அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, வில்லியனூர் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் நடக்கும். விண்ணப்பப்படிவங்கள் இம்மையங்களில் வரும் 24-ம் தேதி முதல் பெறலாம். மேலும் விவரம் அறிய 0413 - 2225751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT