Published : 04 Apr 2023 06:11 AM
Last Updated : 04 Apr 2023 06:11 AM

அண்ணாமலை பல்கலை. தேர்வு முடிவில் குளறுபடி: அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்:அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு முடிவு குளறுபடிகளை கண்டித்து, சி.முட்லூரில் உள்ள சிதம்பரம் அரசுக் கலைக் கல்லூரியில் மாண வர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு சங்கத்தின் கல்லூரி கிளை செய லாளர் அவினேஷ் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் லெனின் மற்றும் மாவட்ட துணை தலைவர் சௌமியா ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு குளறுபடிகள் குறித்து விளக்கினர். இதில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், ‘‘சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக்கழகத் தின் கீழ் செயல்படும் சி.முட்லூரில் உள்ள சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வை எழுதிய மாணவர்களில் சிலர், தேர்வு எழுதவில்லை என தேர்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் போட்டு அரியர் என்று வந்துள்ளது. மேலும் நன்றாக எழுதிய மாணவர்களுக்கு குறைவாக மதிப்பெண் போட்டு, தோல்வி என குறிப்பிட்டு வந்துள்ளது.

மறுமதிப்பீடு செய்யலாம் என்றால் அதற்கான கட்டண தொகை இளங்கலை மாணவர்களுக்கு ரூ.400, முதுகலை மாணவர்களுக்கு ரூ.800 என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தேர்வு முடிவுகளில் இருக்கும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்; மறுமதிப்பீட்டுக்கான கட்டணத் தொகையை நீக்க வேண் டும்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x