Published : 15 Dec 2022 04:27 AM
Last Updated : 15 Dec 2022 04:27 AM

முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு அனுமதி கேட்டு அண்ணாமலைப் பல்கலை. துணை வேந்தரிடம் திருநங்கை மனு

திருநங்கை ரஷிதா

கடலூர்: திருநங்கை ரக்ஷிதா என்பவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமகதிரேசனை நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பது: கடலூர் கோண்டூர் பகுதியைச் சேர்ந்த நான் ( ரக்ஷிதா சரத்குமார்) திருநங்கையாவேன். கடலூர் புனித வளனார் கல்லூரியில் இள நிலை வேதியியல் முடித்தேன்; தொடர்ந்து கடலூர் பெரியார் அரசுகல்லூரியில் முதுநிலை வேதியியல் முடித்துள்ளேன்.

அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறையில் முனைவர்பட்டம் ஆராய்ச்சி படிப்பு படிக்கநடப்பாண்டில் விண்ணப்பித்துள் ளேன். ‘நீங்கள்திருநங்கை என்ப தால், முனைவர் ஆராய்ச்சிக்கான வழிகாட்டி (கைடு) கிடைப்பது சிரமம்; வேறு கல்வி நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்’ என்று பல்கலைக்கழகத் துறை சாரபில், விண்ணப்பத்தை பெறப்பட்ட போது, எனக்கு தெரிவிக் கப்பட்டது.

அடித்தட்டு மாணவர்கள் பலரின்வாழ்வில் ஒளியேற்றி வைத்த, பாரம்பரியமிக்க இப்பல்கலைக்கழ கத்தில் திருநங்கையான நானும் முனைவர் ஆராய்ச்சி பட்டம் பயிலநடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட துணைவேந்தர் ராம கதிரேசன், இது குறித்து நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்துள்ளார்.

திருநங்கை ரஷிதாவை பல் கலைக்கழகத்திற்கு அழைத்துச் சென்று மனு கொடுக்க வைத்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர் மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன் ஆகியோர்இதுபற்றி கூறுகையில், “திருநங் கைக்கு என்று தமிழக அரசு தனி நல வாரியம் தொடங்கி, அவர் களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்துவருகிறது.

தமிழக அரசு பணிகளில் கூட சில திருநங்கைகள் உள்ளனர். இது போன்ற சூழலில் அண் ணாமலைப் பல்கலைக்கழகம் இத்திருநங்கைக்கு உரிய வாய்ப்பளிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். பாரம்பரியமிக்க இப்பல்கலை.யில் திருநங்கையான நானும் பயில வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x