Published : 20 Oct 2022 07:18 PM
Last Updated : 20 Oct 2022 07:18 PM
சென்னை: கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கு இலவச மென்திறன் மேம்பாடு பயிற்சியை சென்னை டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மையம் நடத்தவுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஒரு நாட்டின் உன்னத நிலையை தீர்மானிப்பது இளைஞர்களின் அறிவாற்றல் மற்றும் திறன் ஆகியவை ஆகும். கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளின் சொந்த பாடங்களில் சிறப்பாக உள்ளார்கள் ஆனால் சாப்ட் ஸ்கில் என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய மாணவர் மென்திறன் மேம்பாடு பயிற்சி (மென்மையான / வாழ்க்கை / வேலைவாய்ப்பு / தொழில்முனைவோர் திறன் மேம்பாடு குறித்த பயிற்சி) அவர்களிடம் குறைவாகவே உள்ளது. அதனை கருத்தில் கொண்டு சென்னை டுவின்டெக் அகாடமி மாணவர் மென்திறன் மேம்பாடு பயிற்சி முறையை நடத்தும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
வாழ்க்கையில் தெளிவான திட்டமிட்ட குறிக்கோளுடன், முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால், சாதாரண மாணவர்களும் சரித்திரம் படைக்க முடியும். பட்டமும், சான்றுகளும் அவசியம்தான் என்றாலும் அத்துடன் மென்திறமை எனப்படும் (soft skills) சேர்ந்திருக்கும் போதுதான் ஒரு சக்தி வாய்ந்த பணித்திறன் உருவாகிறது.
வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்பவர்களுக்கு இந்த பயிற்சி மிகவும் அவசியம் ஆகும். மாணவர்களின் வசதியை கருத்தில் கொண்டு 6 வார இறுதி நாட்களை பயிற்சி காலமாக (ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரை) பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி திட்டத்தில் பங்குகொள்ள விருப்பும் கல்லூரி மாணவ - மாணவிகள் 9710485295 / 98400 23411 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது info@chennaitwintech.com மின்னஞ்சல் மூலமோ அக். 31-ம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம். https://bit.ly/3eEW6x2 என்ற ஆன்லைன் இணைப்பில் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்னுரிமை அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT