Published : 16 Oct 2022 06:15 AM
Last Updated : 16 Oct 2022 06:15 AM
சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,875 கவுரவ விரிவுரையாளர்களை கூடுதலாக நியமிக்க உயர் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 5,303 கவுரவ விரிவுரையாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். எனினும், ஆண்டுதோறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வருவதால், உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்கள் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. மேலும், எஞ்சிய பணியிடங்களில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று உயர் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதன்படி, அரசுக் கல்லூரிகளில் 1,875 கவுரவ விரிவுரையாளர்களை கூடுதலாக நியமனம் செய்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு, உயர்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT