Published : 03 Aug 2022 06:54 AM
Last Updated : 03 Aug 2022 06:54 AM
கோவை: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
கோவையிலுள்ள, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒருங்கிணைக்கிறது.
மேற்கண்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கு (2022-23) பகுதி நேர பி.இ. முதலாம் ஆண்டு படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று (3-ம் தேதி) கடைசி நாள் ஆகும். இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பகுதி நேர பி.இ முதலாம் ஆண்டு படிப்புகளுக்கு 1,238 பேர் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 741 ஆகும். விண்ணப்ப கட்டணம், பிற பதிவு,முக்கிய தேதி சார்ந்த விவரங்களை, www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
கலந்தாய்வு இணைய வழியாக மட்டுமே நடைபெறும். விண்ணப்பித்தல் உள்ளிட்ட பிற சந்தேகங்கள் இருப்பின் 0422-2590080, 94869-77757 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT