Published : 22 Jul 2022 05:38 AM
Last Updated : 22 Jul 2022 05:38 AM
சென்னை: அரசுப் பணியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற் கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்.30-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தில் துணை ஆட்சியர் (18), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்கதுணைப்பதிவாளர் (13), வணிக வரி உதவி ஆணையர் (25),
மற்றும் 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவும் நேற்றே தொடங் கியது. ஆர்வமுள்ளவர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.inஆகிய இணையதளங்கள் வழியாக ஆகஸ்ட் 22-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதை சரிசெய்ய ஆக.27 முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.
குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி முதல்நிலைத் தேர்வு அக்.30-ம் தேதிநடைபெறும். கூடுதல் தகவல்களைwww.tnpsc.gov.in/english/notification.aspx என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
2020-ம் ஆண்டு 66 பணியிடங்களை நிரப்புவதற்காக முழுமையாக நடத்தி முடிக்கப்பட்ட குரூப்-1 தேர்வில் தகுதி பெற்றவர்கள் தரவரிசைப் பட்டியல் கடந்த 19-ம்தேதிதான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே குரூப்-1தேர்வுக்கான புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT