Published : 19 Jul 2022 04:19 AM
Last Updated : 19 Jul 2022 04:19 AM

சர்வதேச இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி- ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நடக்கிறது

சென்னை: பள்ளி மாணவர்களுக்காக வெளிவரும் ‘இந்து தமிழ் திசை’யின் ‘வெற்றிக்கொடி’ சார்பில் மாணவ-மாணவிகளின் தனித்திறன்களை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அவ்வகையில் சர்வதேச இயற்கை பாதுகாப்பு தினத்தை (ஜூலை 28) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியை ‘வெற்றிக்கொடி’ நடத்துகிறது.

இந்த ஓவியப் போட்டியில் 4 முதல் 12-ம் வகுப்பு மாணவ- மாணவியர் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர், ‘இயற்கை பாதுகாப்பு’ எனும் தலைப்பில் ஓவியங்களை வரைந்து, chnVK_contest@hindutamil.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி அடையாள அட்டை எண், கைபேசி எண் இணைத்து, வரும் 22-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். சிறந்த ஓவியங்களை வரைந்த 3 மாணவர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கும் பரிசு காத்திருக்கிறது.

போட்டி எண்: 2-ல் பரிசு பெறும் மாணவர்கள்:

1. கு.ஸ்ரீமதி, 12-ம் வகுப்பு, சென்னை மேல்நிலைப்பள்ளி, பீமண்ணா தோட்டம், அபிராமபுரம், சென்னை, 2. கி.சப்னா, 12-ம் வகுப்பு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தொண்டாமுத்தூர், கோவை, 3. எம்.தீபிகா, 8-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி, வெங்கிடாங்கால், கீழ்வேளூர் வட்டம், நாகை மாவட்டம்.

ஓவியப் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விவரம், அடுத்த வார போட்டிக் கேள்வியுடன் வெளியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x