Published : 17 Jul 2022 04:10 AM
Last Updated : 17 Jul 2022 04:10 AM

கோவை அரசு இசைக் கல்லூரியில் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

கோவை

கோவையில் உள்ள அரசு இசைக் கல்லூரியில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக கலைப் பண்பாட்டுத்துறையின் கீழ் கோவையில் இயங்கும் அரசு இசைக்கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றாண்டு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புத் துறைகளில் இளங்கலை இசைப்பிரிவில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம் ஆகிய துறைகளில் சேர்வதற்கு பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சியுடன், 17 வயதில் இருந்து 22 வயது வரையிலும், பட்டயப்படிப்பு பிரிவில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம்,தவில் ஆகிய துறைகளில் சேர்வதற்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் 16 வயதிலிருந்து 21 வயது வரை இருக்க வேண்டும்.

ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்வதற்கு பி.ஏ இசை அல்லது இசைக்கலைமணி பட்டயம் பெற்றிருப்பதுடன் 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மாலை நேர இசைக் கல்லூரியில் குரலிசை, வீணை, வயலின் போன்ற பிரிவு களில் இரண்டாண்டு சான்றிதழ் படிப்புக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் 16 வயதுக்கு மேல் வயது வரம்பு இல்லை.

மேற்காணும் படிப்புகளில், பிஏ இசை படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.1,480, பட்டயப்படிப்பு மற்றும் இசை ஆசிரியர் பயிற்சிக்கு ரூ.750, மாலை நேர இசை படிப்புக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும். இலவச பயணப் பேருந்து அட்டையும் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை www.artandculture.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப் பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x