Published : 27 Apr 2022 07:21 AM
Last Updated : 27 Apr 2022 07:21 AM

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘சுத்தம் சுகாதாரம்’ விநாடி- வினாவில் வெற்றி பெற்ற மாணவர்கள்: 1,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்பு

சென்னை: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’, ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்திய ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி விழிப்புணர்வு சுகாதார விநாடி-வினா போட்டி கடந்த 23, 24-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நாம் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய 5 சுகாதார செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் ஒளிபரப்பான ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி சுகாதார விழிப்புணர்வு தொகுப்பில் கூறப்பட்ட சுகாதார ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை முன்வைத்து அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இந்த சுகாதார விநாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஜூனியர் பிரிவில் சென்னை அம்பத்தூர் டி.ஐ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின்6-ம் வகுப்பு மாணவி சான்வி முதலிடமும், லிசியக்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவன் பி.ஷிரவன் 2-ம் இடமும், டால்மியாபுரம் டால்மியா வித்யாமந்திர் பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி ஏ.ஜோஸ்லின் ஆண்ட்ரியா 3-ம் இடமும் பிடித்தனர். சீனியர் பிரிவில் மகாத்மா மான்டிஸோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவன் ஐ.முகமது ரிவின் முதலிடமும், சென்னை கே.கே.நகர் பிஎஸ்பிபி சீனியர் மேல்நிலைப் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவன் எம்.வி.ஹர்ஷவர்தன் 2-ம் இடமும், திருச்சிமான்ட்ஃபோர்ட் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி என்.ஹரிணி 3-ம் இடமும் பிடித்தனர்.

இந்த விநாடி-வினா நிகழ்வின் மாஸ்டராக எக்ஸ் குவிஸ் ஐ.டி.நிறுவனர் அரவிந்த் ராஜீவ், மதிப்பீட்டாளராக மூத்த பயிற்சியாளர்அஸ்வின் கார்த்தி செயல்பட்டனர். இந்த நிகழ்வை தவறவிட்டவர்கள் ஜூனியர், சீனியர் இறுதிப்போட்டிகளை ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் பக்கத்தில் https://www.htamil.org/00490 மற்றும் https://www.htamil.org/00489 ஆகிய லிங்க்குகளில் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x