Published : 13 Mar 2022 04:15 AM
Last Updated : 13 Mar 2022 04:15 AM

பயோ டெக்னாலஜி படிப்பு ஏப்.23-ல் கேட்-பி நுழைவுத்தேர்வு

சென்னை

உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். நடப்பாண்டுக்கான கேட்-பி மற்றும் பிஇடி தேர்வுகள் ஏப்.23-ம் தேதி கணினிவழியில் நடத்தப்பட உள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் dbt.nta.ac.in என்ற இணையதளம் வழியாக மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.1,200-ம், எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.600-ம் செலுத்த வேண்டும்.

பாடத் திட்டம், தகுதி , வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x