Published : 13 Mar 2022 04:00 AM
Last Updated : 13 Mar 2022 04:00 AM

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் ஆராய்ச்சி படிப்பில் சேரலாம்

புதுச்சேரி

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இணையம் வழியாக மார்ச் 11-ம் தேதி முதல் கோரப்பட்டுள்ளது.

இணையவழி மூலம் வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை, பல்கலைக்கழகத்தின் “www.pondiuni.edu.in/admissions 2021-22 ”என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x