Published : 16 Nov 2025 12:33 AM
Last Updated : 16 Nov 2025 12:33 AM

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது: முதல் தாள் தேர்வில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பு;  1,241 மையங்களில் இன்று 2-ம் தாள் தேர்வு 

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு (தாள்-1) வேப்பேரியில் உள்ள பள்ளியில் நேற்று நடைபெற்றது. அங்கு தேர்வெழுத வந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.படம்: ம.பிரபு

சென்னை: ஆசிரியர் பணித் தகுதிக்​கான டெட் தேர்வு நேற்று தொடங்​கியது. முதல் தாள் தேர்​வில் சுமார் 1 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். தேர்வு எளி​தாக இருந்​த​தாக தேர்​வர்​கள் கூறி​யுள்​ளனர். 2-ம் தாள் தேர்வு இன்று நடை​பெறுகிறது.

இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி, அனைத்து வித​மான பள்​ளி​களி​லும் இடைநிலை, பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யில் சேர தகு​தித்
தேர்​வில் (டெட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும். இந்த தேர்வு மொத்​தம் 2 தாள்​களைக் கொண்​டது. முதல் தாளில் தேர்ச்சி பெறு​பவர்​கள் இடைநிலை ஆசிரிய​ராக​வும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்​கள் பட்​ட​தாரி ஆசிரிய​ராக​வும் பணிபுரிய​லாம். தமிழகத்​தில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் டெட் தேர்வு நடத்​தப்​படு​கிறது. எனினும், கடந்த 2 ஆண்​டுகளாக டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், 2025-ம் ஆண்டு டெட் தேர்​வுக்​கான அறி​விப்​பாணையை டிஆர்பி கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளி​யிட்​டது. இதையடுத்​து, இணை​ய​
வழி​யில் விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. இந்தச் சூழலில், பணி​யில் உள்ள ஆசிரியர்​கள் அனை​வருக்​கும் டெட் தேர்ச்சி கட்​டா​யம் என்று உச்ச நீதி​மன்​றம் கடந்த செப்​.1-ம் தேதி உத்​தர​விட்​டது. இதன்​காரண​மாக, டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பித்​தவர்​கள் எண்​ணிக்கை கணிச​மாக உயர்ந்​தது.

அதன்​படி, டெட் முதல் தாள் தேர்​வுக்​கு, 1.07 லட்​சம் பேர், 2-ம் தாள் தேர்​வுக்கு 3.73 லட்​சம் பேர் என மொத்​தம் 4.80 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​தனர். இதில், தகு​தி​யானவர்​களுக்கு ஹால் டிக்​கெட் நவ.3-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. இந்​நிலை​யில், இந்த ஆண்​டுக்​கான டெட் தேர்வு நேற்று தொடங்​கியது. தமிழகம் முழு​வதும் 387 மையங்​களில் முதல் தாள் தேர்வு நேற்று நடை​பெற்​றது. முதல் தாள் தேர்வு எழுத 1.07 லட்​சம் பேர் விண்​ணப்​பித்த நிலை​யில், அதில் 92,412 (86.07%) பேர் தேர்வு எழு​தினர். 14,958 பேர் தேர்​வில் கலந்து கொள்​ள​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

தேர்வு மையத்​துக்​குள் தேர்​வர்​கள் பலத்த சோதனை​களுக்​குப் பின்​னரே அனு​ம​திக்​கப்​பட்​டனர். மொத்​தம் 150 மதிப்​பெண்​களுக்கு தேர்வு நடத்​தப்​பட்​டது. இந்தத் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த தேர்வர்கள், ‘‘கணிதம், தமிழ் ஆகிய வி​னாக்​கள், பள்​ளிப்பாடப் புத்​தகங்​களில் இருந்து அதி​கம் கேட்​கப்​பட்​டன. உளவியல் கல்வி சார்ந்த வி​னாக்கள் மட்​டும் கடின​மாக இருந்தன. பொது​வாக, தேர்வு சற்று எளி​தாக இருந்​தது’’ என்று தெரிவித்தனர். ‘தெற்​காசி​யா​வின் சாக்​ரடீஸ் என்று அழைக்​கப்​பட்​ட​வர் யார்’, ‘தமிழ்​நாடு எனும் சொல், முதலில் ஆளப்​படும் இலக்​கியம் எது’, ‘இந்​தி​யா​வின் பறவை மனிதர் என்று அழைக்​கப்​பட்​ட​வர் யார்’ என்பது போன்ற வி​னாக்​கள் கேட்​கப்​பட்​டன.

தமிழகம் முழு​வதும் 1,241 மையங்​களில், பட்​ட​தாரி ஆசிரியர்​களுக்​கான டெட் 2-ம் தாள் தேர்வு இன்று காலை நடை​பெறுகிறது. இதில் 3.73 லட்​சம் பட்​ட​தா​ரி​கள்​ பங்​கேற்​க உள்​ளனர்​. இந்​த இரு தேர்​வு​களின்​ முடிவு​களை துரித​மாக வெளி​யிட முடிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக துறை அதி​காரி​கள்​ தரப்பில் தெரி​விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x