Published : 14 Nov 2025 06:24 AM
Last Updated : 14 Nov 2025 06:24 AM

பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் நானோ சயின்ஸ் டெக்னாலஜி படிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு

சென்னை: பொறி​யியல் மாணவர்​கள் ஆன்​லைனில் நானோ சயின்ஸ் மற்​றும் டெக்​னாலஜி படிக்க. அ்ண்ணா பல்​கலைக்​கழகம் சிறப்பு ஏற்​பாடு செய்​துள்​ளது.

இது தொடர்​பாக, அண்ணா பல்​கலைக்​கழகம் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் ஓர் அங்​க​மான அழகப்பா தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் (ஏ.சி.டெக்) செயல்​படும் நானோ அறி​வியல் மற்றும் தொழில்​நுட்​ப மையத்​தில், நானோ ச​யின்ஸ் மற்​றும் டெக்​னாலஜி தொடர்​பான குறுகிய கால படிப்பு நவ. 26 முதல் டிச. 9-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

ஆன்​லைனில் நடத்​தப்​படும் இந்த படிப்​பில், இளநிலை, முது​நிலை பொறி​யியல் மாணவர்​கள், ஆசிரியர்​கள், கல்​வி​யாளர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள் சேரலாம். இந்த படிப்​பில் நானோ டெக்​னாலஜி தொடர்​பான அடிப்​படை விஷ​யங்​கள், அண்​மைக்​கால தொழில்​நுட்ப வளர்ச்சி மற்​றும் பயன்​பாடு​கள் போன்​றவை குறித்து சொல்​லித் தரப்​படும். இதற்கு பதிவு செய்ய கடைசி நாள் வரும் 18-ம் தேதி ஆகும். கூடு​தல் விவரங்​களை பெற 8098953365 என்ற செல்​போன் எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x