Published : 11 Nov 2025 12:56 AM
Last Updated : 11 Nov 2025 12:56 AM

அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பாடத்திட்ட மாற்றம் குறித்து நவ.23, 24-ல் ஆலோசனை

சென்னை: பள்​ளிக்​கல்​வித் துறை​யில் பாடத்​திட்ட மாற்​றம் தொடர்​பான முதல் ஆலோசனைக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் நவ. 23, 24-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது.

மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இதற்கு மாற்​றாக, மாநிலத்​துக்கு என பிரத்​யேக கல்விக் கொள்​கையை வடிவ​மைத்து தமிழக அரசு வெளி​யிட்​டது. இதையடுத்​து, புதிய பாடத்​திட்​டத்தை வடிவ​மைப்​ப​தற்கான வல்​லுநர் குழு மற்​றும் அதை மேற்​பார்​வை​யிட்டு ஒப்​புதல் அளிப்​ப​தற்​கான உயர்​நிலைக் குழு என 2 குழுக்களை பள்​ளிக்​கல்​வித் துறைசமீபத்​தில் நியமனம் செய்​தது.

உயர்​நிலைக் குழு​வில் அமைச்​சர் அன்​பில் மகேஸ், இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன், கிரிக்​கெட் வீரர் அஸ்​வின் உள்​ளிட்ட 16 பேரும், பாடத்​திட்ட வடிவ​மைப்​புக் குழு​வில் திட்டக்குழு உறுப்​பினர் சுல்தான் அகமது இஸ்​மா​யில், விஞ்​ஞானி த.வி.வெங்​கடேஸ்​வரன் உள்​ளிட்ட 20 பேரும் உள்​ளனர். இந்​நிலை​யில், பாடத்​திட்டமாற்​றம் தொடர்​பாக சென்னை​யில் நவ.23, 24-ம் தேதிகளில்ஆலோசனை நடைபெற உள்​ளது. அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலைமை வகிக்கிறார். இதில்பங்​கேற்க குழு உறுப்பினர் கள் அழைக்கப்பட்​டுள்ளனர். தற்​போதைய காலச் சூழலுக்கு ஏற்ப பல்​வேறு புதிய தொழில்​நுட்​பங்​கள், தகவல்​களை பாடத்​தில் சேர்க்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக தெரி​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x