Published : 10 Nov 2025 01:13 PM
Last Updated : 10 Nov 2025 01:13 PM
கடலூர்: நிலுவைத் தொகையை வழங்கக் கோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7-வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும், அயர் பணியிட ஆசிரியர்களை உடனே உள்ளெடுப்பு செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அரசுத் துறைகளைப் போலவே அனைத்து பணப் பயன்களையும் ஓய்வு பெற்ற உடனேயே வழங்கிட வேண்டும, ஆட்சிக்குழு மற்றும் கல்விக் குழுக்களில் ஆசிரியர் சங்கங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், அனைத்து நிர்வாகப் பொறுப்பு காலியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடைபெறும் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

அதன்படி இன்று (நவ.10) காலை காலை கூட்டமைப்பினர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் அருகே கூடினர். பின்னர் கோரிக்கை முழக்கங்களுடன் ஊர்வலமாக சென்று பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் கீழ் பகுதியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT