Published : 10 Nov 2025 06:38 AM
Last Updated : 10 Nov 2025 06:38 AM
சென்னை: சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திருப்பித் தராத, உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: கல்லூரிகளில் சேர்ந்து குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சேர்க்கையை ரத்து செய்து விட்ட மாணவர்களுக்கு உரிய விதிகளின்படி அவர்கள் செலுத்திய கட்டணங்களை திருப்பித் தர வேண்டும். இதற்காக யுஜிசியால் 2018-ல் வெளியிடப்பட்ட கொள்கை, கடந்த கல்வியாண்டுடன் காலாவதியாகிவிட்டது.
இதையடுத்து புதிய கொள்கை வகுக்கும் வரை நடப்பு கல்வியாண்டிலும் அதே கொள்கையை கல்வி நிறுவனங்கள் தொடர வேண்டும். அதன்படி, கல்லூரி சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களின் கல்விக் கட்டணம், சான்றிதழ்களை கல்லுாரி நிர்வாகங்கள் உடனடியாக திருப்பி ஒப்படைக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT