Published : 04 Nov 2025 06:15 AM
Last Updated : 04 Nov 2025 06:15 AM

திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

சென்னை: திரு​வொற்​றியூர் அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யத்​தில் பல்​வேறு தொழில் பிரிவு​களுக்கு நவ.14-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நீட்​டிக்கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: தமிழக அரசு வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்சித் துறை​யின் கீழ் இயங்​கும், திரு​வொற்​றியூர் அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யத்​தின் நேரடி சேர்க்கை நவ.14-ம்
தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சேர விரும்​பும் மாணவர்​கள் அனைத்து சான்​றிதழ்​களு​டன் திரு​வொற்​றியூர் அரசு தொழிற்​ப​யிற்சி நிலை​யத்​தில் சேர்ந்து கொள்​ளலாம். உற்​பத்தி செயல்​முறை கட்​டுப்​பாடு மற்​றும் ஆட்​டோமேஷன், தொழிற்​கூடத்​தில் தளவாடங்​கள் ஆகிய ஓர் ஆண்டு பிரிவு​களி​லும், டெக்​னீசி​யன் மெக்​கட்​ரானிக்ஸ் என்ற 2 ஆண்டு தொழிற் பிரிவுக்​கும் சேர்க்கை நடை​பெற உள்ளது.

பயிற்சி முடிந்​தவுடன், வளாக நேர்​காணல் நடத்தி தொழில் நிறு​வனத்​தில் 100 சதவீதம் வேலை​வாய்ப்பு பெற்​றுத் தரப்​படும். மாதம் ரூ.750 உதவித் தொகை, தமிழ் புதல்​வன் திட்​டத்​தின் கீழ் ஆண்​களுக்​கும், புது​மைப்​பெண் திட்​டத்​தின் கீழ் பெண்​களுக்​கும் மாதம் ரூ.1,000, பாடப் புத்​தகங்​கள், வரைப்பட கருவி​கள், 2 செட் சீருடைகள், பேருந்து பாஸ் ஆகியவை இலவச​மாக வழங்​கப்​படும்.

பயிற்​சி​யில் சேருபவர்​களுக்கு பயிற்சிக் கட்​ட​ணம் கிடை​யாது. நேரடி சேர்க்​கைக்கு முதல்​வர், அரசினர் தொழிற்​ப​யிற்சி நிலை​யம், திரு​வொற்​றியூர், சென்னை -19, குமரன் நகர், இரண்​டாவது தெரு என்று முகவரி​யில் நேரில் தொடர்பு கொள்​ளலாம். மேலும், 95668 91187, 99403 72875, 89460 17811, 81108 45311 என்ற எண்​களில் தொடர்பு கொள்​ளலாம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x