Published : 04 Nov 2025 06:05 AM 
 Last Updated : 04 Nov 2025 06:05 AM
சென்னை: திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளுக்கு நவ.14-ம் தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும், திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நேரடி சேர்க்கை நவ.14-ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து சான்றிதழ்களுடன் திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கொள்ளலாம். உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன், தொழிற்கூடத்தில் தளவாடங்கள் ஆகிய ஓர் ஆண்டு பிரிவுகளிலும், டெக்னீசியன் மெக்கட்ரானிக்ஸ் என்ற 2 ஆண்டு தொழிற் பிரிவுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.
பயிற்சி முடிந்தவுடன், வளாக நேர்காணல் நடத்தி தொழில் நிறுவனத்தில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். மாதம் ரூ.750 உதவித் தொகை, தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பெண்களுக்கும் மாதம் ரூ.1,000, பாடப் புத்தகங்கள், வரைப்பட கருவிகள், 2 செட் சீருடைகள், பேருந்து பாஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. நேரடி சேர்க்கைக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருவொற்றியூர், சென்னை -19, குமரன் நகர், இரண்டாவது தெரு என்று முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 95668 91187, 99403 72875, 89460 17811, 81108 45311 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT