Published : 03 Nov 2025 03:46 PM
Last Updated : 03 Nov 2025 03:46 PM

கோவை மாணவி ரிதன்யா அசத்தல்: மாணவர்களுக்கு துணைபுரியும் இணையதளம் அறிமுகம்

மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உத வும் வகையில், கோவை யைச் சேர்ந்த மாணவி ரிதன்யா, 'வைப்ரன்ஸ் ஹப்' என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவும் வகையில், கோவையைச் சேர்ந்த மாணவி ரிதன்யா, ‘வைப்ரன்ஸ் ஹப்’ என்ற புதுமையான இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா (17). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக ‘வைப்ரன்ஸ் ஹப்’ (www.vibrancehub.org) என்ற இணைய தளம் மற்றும் மொபைல் ஆப் உருவாக்கியுள்ளார். இந்த தளமானது, மாணவர்கள் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவுகிறது.

புதிய இணையதளம் தொடர்பாக மாணவி ரிதன்யா கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு காலத்தில் தகவல்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை சிந்தித்து படைப்பாற்றலாக மாற்றும் வழிகாட்டி தேவைப்படுகிறது. அதற்காகவே ‘வைப்ரன்ஸ் ஹப்’ உருவாக்கப்பட்டது. இதில் மாணவர்கள் குழுவாக இணைந்து திட்டங்களை உருவாக்கலாம். வாரந்தோறும் பிரச்சினை தீர்க்கும் அமர்வுகள், ஆரோக்கிய பராமரிப்புக்கான வழிகாட்டுதல், ‘ரஸ்டி’ என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட் பாட் உரையாடல், உதவியாளர் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதில் மாணவர்கள் தங்கள் திட்டங்களுடன் சேர்த்து தூக்கம், மன அழுத்தம், எண்ணப்பதிவுகள் போன்றவற்றையும் பதிவு செய்யலாம்.

தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம் ஒரு புதிய இந்தியாவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப அடித் தளத்தை ‘வைப்ரன்ஸ் ஹப்’ அமைக்கிறது. இத்தளம் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x