Published : 03 Nov 2025 06:58 AM
Last Updated : 03 Nov 2025 06:58 AM
சென்னை: எஸ்ஆர்எம்ஐஎஸ்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் கட்டாங்குளத்தூர், ராமாபுரம், வடபழனி, அச்சரப்பாக்கம், திருச்சிராப்பள்ளி மற்றும் டெல்லி-என்சிஆர் (காசியாபாத், உத்தரப் பிரதேசம்) வளாகங்களுடன், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், சோனிபத் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், அமராவதி (ஆந்திரப் பிரதேசம்) ஆகியவை, புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல் மற்றும் மனிதவியல், சட்டம், மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல், வேளாண் அறிவியல் ஆகிய துறைகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளை 2026 மார்ச் முதல் ஜூலை வரை 3 கட்டங்களாக நடத்தவுள்ளது.
அனைத்து பாடங்களுக்குமான தேர்வு விண்ணப்பங்கள் இன்று (நவம்பர் 3) மதியம் 12:00 மணிமுதல் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் பல் வேறு எஸ்ஆர்எம்ஜேஇஇ தேர்வுகள் நடைபெறும் நாள், விண்ணப்பிக்க கடைசி தேதி போன்ற விவரங்களுக்கு www.srmist.edu.in இணையதளத்தை அணுகலாம். இத்தேர்வுகள் தொலைநிலை கண்காணிப்பு ஆன்லைன் முறையில் (RemoteProctored Online Mode - RPOM) நடைபெறும். மாணவர்கள் இணைய இணைப்பு கொண்ட கணினி மூலம் தங்கள் இடத்திலிருந்தே தேர்வை எழுதலாம்.
நிறுவனர் உதவித்தொகை: எஸ்ஆர்எம்ஜேஇஇ-ல் முதலிடம் பெறுபவர்களுக்கு நிறுவனர் உதவித்தொகை (100% கல்விக் கட்டணத் தள்ளுபடி, 100% விடுதிக் கட்டணத் தள்ளுபடி) மற்றும் தரவரிசைகளின் அடிப்படையில் 100% முதல் 25% வரையிலான கல்விக் கட்டணத் தள்ளுபடி ஆகியவை வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT