Published : 31 Oct 2025 06:31 AM
Last Updated : 31 Oct 2025 06:31 AM

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம்

சென்னை: உத​விப் பேராசிரியர் பணிக்​கான சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு விண்​ணப்​பத்​தில் திருத்​தம் செய்ய நாளை வரை அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது. கல்​லூரி​கள், பல்​கலைக்​கழகங்​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான மத்​திய அரசின் உதவித்​தொகை​யைப் பெற​வும் நெட் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறவேண்​டும்.

இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டுக்கு இரு​முறை கணினிவழி​யில் நடத்தி வரு​கிறது. இதில், சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு சில அறி​வியல் பாடப்​பிரிவு​களுக்கு மட்​டும் பிரத்​யேக​மாக நடத்​தப்​படும்.

நடப்பு ஆண்டு 2-ம் கட்ட சிஎஸ்​ஐஆர் நெட் தேர்வு டிசம்​பர் 18-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான விண்​ணப்ப பதிவு கடந்த செப்​டம்​பர் 25-ல் தொடங்கி அக்​டோபர் 27-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. இந்​நிலை​யில், விண்​ணப்​பங்​களில் திருத்​தம் செய்ய என்​டிஏ வாய்ப்பு வழங்​கி​யுள்​ளது. விருப்​பம் உள்​ளவர்​கள் https://csirnet.nta.ac.in என்ற இணை​யதளம் வழி​யாக நாளைக்​குள் (நவ.1) திருத்​தங்​களை மேற்​கொள்​ளலாம்.

இதில் ஏதேனும் சந்​தேகங்​கள், சிரமங்​கள் இருந்​தால் மாணவர்​கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்​லது csirnet@nta.ac.in எனும் மின்​னஞ்​சல் முகவரி வாயி​லாக தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம். தேர்​வுக்​கான ஹால்​டிக்​கெட் வெளி​யீடு உள்​ளிட்ட கூடு​தல் விவரங்​களை https://nta.ac.in என்ற தளத்​தில் அறிந்து கொள்​ளலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x