Published : 31 Oct 2025 09:53 AM
Last Updated : 31 Oct 2025 09:53 AM
வணக்கம், என் பெயர் சசிதரன். நான் காஞ்சிபுரத்தில் வசிக்கிறேன். ‘நான் முதல்வன்’ திட்டத்தை பற்றி எனக்கு என் நண்பர் மூலமாகத் தெரிய வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித் தேர்வுகள் - குறிப்பாக SSC, RRB மற்றும் Banking தேர்வுகளுக்காக இலவச உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தங்குமிடம், உணவு, பயிற்சி என அனைத்தும் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வாய்ப்புக்காக நான் விண்ணப்பித்தேன். அதன் அடிப்படையில் நடத்திய நுழைவுத் தேர்வில் முதல் 1000 பேரில் நான் தேர்வு செய்யப்பட்டு, சென்னை ‘நான் முதல்வன்’ மையத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு SSC CHSL Mains தேர்வு இருந்தது. அங்கு இருந்த நிபுணர் மென்டர்களின் வழிகாட்டுதலாலும், நண்பர்களுடன் சேர்ந்து படித்த சூழலாலும் எனக்கு மிகச் சிறந்த பயிற்சி கிடைத்தது. பலரும் கிராமப்புறங்கள், பின்தங்கிய பகுதிகளில் இருந்து வந்து ஒரே குடும்பமாகக் கற்றுக் கொண்டோம். பயிற்சி வகுப்புகள், வழிகாட்டுதல் அனைத்தும் எனக்கு மிகுந்த ஆதரவாக அமைந்தது.
SSC CHSL மற்றும் CGL என இரு தேர்வுகளுக்கும் நான் எழுதினேன். முடிவுகள் வெளிவந்தபோது இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்றிருந்தேன். என் வீட்டில் அனைவருக்கும் இது ஒரு நம்பமுடியாத மகிழ்ச்சியான தருணம். என் அப்பா முனுசாமி அவர்கள் கூட்டுறவு சங்கத்தில் சேல்ஸ்மேன் ஆக பணிபுரிகிறார். அவருக்கு சிறுவயதில் இருந்தே அரசு வேலை செய்வது என்ற கனவு இருந்தது. அவர் 40 வயது வரை முயற்சி செய்தார், ஆனால் அவரால் அந்தக் கனவை நிறைவேற்ற முடியவில்லை.
இன்று அந்தக் கனவை நான் நிறைவேற்றியிருக்கிறேன். நான் தற்போது SSC CGL தேர்வின் மூலம் பாதுகாப்புத் துறையில் ஆடிட்டராக பணியில் சேர்ந்து இருக்கிறேன். அதுவும் நம் தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள அலுவலகத்தில். இது ஒரு கனவு நனவாகும் தருணம். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த என்னை ஒரு அரசுத் துறை அதிகாரியாக மாற்றியிருப்பது ‘நான் முதல்வன்’ திட்டம் தான்.

இந்த அற்புதமான வாய்ப்பை உருவாக்கி, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய எதிர்காலத்தை அளித்த மதிப்பிற்குரிய முதலமைச்சருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இதயபூர்வமான நன்றி.
இன்று என் அப்பாவின் கனவையும், எனது கனவையும் நிறைவேற்றியிருக்கிறேன். இந்த வெற்றி ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கே சொந்தமானது
வெற்றி நிச்சயம் திட்டம்: என் பெயர் செல்வம். நான் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன், தற்போது எனக்கு 23 வயது. நான் ITI படிப்பை முடித்த பிறகு வேலை வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தேன்.
அப்போது தான் தமிழ்நாடு அரசு தொடங்கிய “வெற்றி நிச்சயம்” திட்டம் பற்றி அறிந்தேன். இந்த திட்டத்தின் மூலம், நான் AMBITION CONSULTANTS - DAWN TRAINING & TESTING CENTER என்ற நிறுவனத்தில் Polisher, 45 நாட்கள் கட்டணமில்லா திறன் பயிற்சியில் சேர்ந்தேன். பயிற்சியில், ஆங்கிலம் பேசும் திறன் கூட கற்றுக்கொடுக்கப்பட்டது. அந்த 45 நாட்களில் நான் மிகுந்த ஆர்வத்துடன் உழைத்தேன். புதிய திறன்களை கற்றுக்கொண்டேன். எனது நம்பிக்கை அதிகரித்தது.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின், அதே நிறுவனத்தின் மூலமாக எனக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைத்தது. இன்று நான் சிங்கப்பூர் SEATRIUM SHIPYARDன் கீழ் உள்ள VANQUISH OFFSHORE SERVICE PTE LTD நிறுவனத்தில் Polisher/Power Tooler ஆக மாதம் SGD 443 சம்பளத்துடன் வேலை செய்து வருகிறேன்.
இந்த வாய்ப்பு எனக்கு ஒரு வேலை மட்டுமல்ல - என் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மாற்றிய ஒரு புதிய ஆரம்பம். இன்று நானும், என் குடும்பத்தினரும் மனநிறைவுடன், பெருமிதத்துடன் வாழ்கிறோம். இது என் கதையின் முடிவு அல்ல... என் கனவுகளின் தொடக்கம்!
இந்த மாற்றத்தை சாத்தியமாக்கிய தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC), மற்றும் வெற்றி நிச்சயம் திட்ட குழுவிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT