Published : 28 Oct 2025 06:04 AM
Last Updated : 28 Oct 2025 06:04 AM

தொலைதூர படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி வெளி​யிட்ட அறி​விப்​பு: நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) பிப்​ர​வரி பரு​வச் சேர்க்​கைக்​கான இணை​ய​வழி, தொலைத்​தூரப் படிப்​பு​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இதையடுத்து யுஜிசி ஒழுங்​கு​முறை விதி​முறை​களின் அடிப்​படை​யில் முழு​மை​யான கட்​டமைப்பு வசதி​களை கொண்ட உயர்​கல்வி நிறு​வனங்​கள் தொலைத்​தூர, இணைய வழியி​லான படிப்​பு​களை கற்​றுதர அனு​மதி கோரி விண்​ணப்​பிக்​கலாம்.

தகு​தி​யான உயர்​கல்வி நிறு​வனங்​கள் deb.ugc.ac.in/ எனும் வலைத்​தளம் வழி​யாக நவ.10-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். விண்​ணப்ப நகலை ஆவணங்​களு​டன் நவ.20-ம் தேதிக்​குள் யுஜிசி அலு​வல​கத்​தில் சமர்​ப்பிக்க வேண்​டும்.

அதன்​பின் விண்​ணப்ப படிவங்​கள் பரிசீலனை செய்​யப்​பட்டு தகு​தி​யான பல்​கலைக்​கழகங்​களுக்கு அங்​கீ​காரம் வழங்​கப்​படும். இது​சார்ந்த விதி​முறை​கள் உட்பட கூடு​தல் விவரங்​களை மேற்​கண்ட வலைத்​தளத்​தில் அறிந்து கொள்​ளலாம். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x