Published : 22 Oct 2025 06:43 AM 
 Last Updated : 22 Oct 2025 06:43 AM
சென்னை: இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில், ஆன்லைனில் ஜப்பானிய மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, சென்னை, தேனாம்பேட்டையில் இயங்கி வரும் இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் சுகுணா ராமமூர்த்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் மொழிப் பள்ளி, ஜப்பானிய மொழி பற்றிய ஆரம்பநிலை பயிற்சியை ஆன்லைன் வாயிலாக அளிக்க உள்ளது. இதில், ஜப்பானிய மொழியில் பேசுவது, எழுதுவது குறித்து சொல்லித் தரப்படும்.
இதற்கான, ஆன்லைன் வகுப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சியில் சேருவோருக்கு ஜப்பானிய மொழி மட்டுமின்றி ஜப்பானிய கலை, கலாச்சாரம், வணிக நடமுறைகள் ஆகியவும் கற்றுத் தரப்படும். வகுப்பு நவ. 2-ம் தேதி தொடங்குகிறது.
இப்பயிற்சியில் சேரும் மாணவர்களை, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் ஃபவுண் டேஷன் சார்பில் நடத்தப்பட உள்ள ‘ஜெஎல்பிடி என்-5 லெவல்’ தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் பயிற்சி அமைந்திருக்கும். இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 98843 94717 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.ijcci.com என்ற இணையதளத்திலும் விவரங்களை அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT