Published : 15 Oct 2025 06:23 AM
Last Updated : 15 Oct 2025 06:23 AM

10,000 மாணவர்களுக்கு ரூ.12 கோடி நிதியுதவி: விஐடி வேந்தர் கோ.​விசுவநாதன் தகவல்

வேலூரில் விஐடி வேந்தர் கோ.​விசுவ​நாதன் செய்​தி​யாளர்களை நேற்று சந்தித்தார். உடன், விஐடி துணைத் தலை​வர் சேகர் விசுவ​நாதன் உள்​ளிட்​டோர்.

சென்னை: அனை​வருக்​கும் உயர்​கல்வி அறக்​கட்​டளை சார்​பில் 10,000 மாணவர்​களுக்கு ரூ.12 கோடி உதவித்​தொகை வழங்கப்பட்டுள்​ள​தாக விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறி​னார்.

இது தொடர்​பாக வேலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கிராமப்​புற மாணவர்​களை ஊக்​குவிக்​கும் ஸ்டார்ஸ் திட்​டத்​தில் நடப்​பாண்​டில் 100-க்​கும் மேற்​பட்ட மாணவர்​களுக்கு இலவச கல்வி வழங்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, பள்​ளிப் படிப்பை முடித்​தவர்​கள் உயர்​கல்​வியைப் பெறும் வகை​யில் ‘அனை​வருக்​கும் உயர்​ கல்​வி’ அறக்​கட்​டளை சார்​பில் 10 ஆயிரம் பேருக்கு ரூ.12 கோடி உதவித்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

விஐடி பல்​கலை.​யில் 4,000 பேர் பிஹெச்டி படிக்​கின்​றனர். இவ்​வாறு கூறி​னார். விஐடி துணைத் தலை​வர் சேகர் விசுவ​நாதன் கூறும்​போது, “2024 ஷாங்​காய் ஏஆர்​டபிள்​யூயு தரவரிசைப் பட்​டியலில் இந்​தி​யா​வில் முதல் 2 இடங்​களில் விஐடிவந்​துள்​ளது. பிஹெச்டி மாணவர்​களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊக்​கத்​தொகை அளிக்​கிறோம்.

அமெரிக்​கா​வின் ஸ்டான் ஃ​போர்டு பல்​கலை. வெளி​யிட்​டுள்ள பட்​டியலில் இந்​திய அளவில் வேலூர் விஐடி முதல் 5 இடங்​களில் உள்​ளது. அதேபோல் க்யூ.எஸ். உலக பல்​கலைக்​கழக தரவரிசை​யில் பொறி​யியல் தொழில்​நுட்​பத்​துறை​யில் விஐடி 142-வது இடத்​தில் உள்​ளது. இந்​திய அளவில் 9-ம் இடம் பிடித்​துள்​ளது. கம்ப்​யூட்​டர் சயின்ஸ் மற்​றும் இன்ஃபர் ​மேஷன் சிஸ்​டம்ஸ் பாடப் பிரி​வில் 110-வது இடத்​தி​லும், டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்​ணறிவு பாடப் பிரி​வில் முதல் 100 இடத்​தி​லும் உள்​ளது.

தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்​டியலில் 2016 முதல் தொடர்ந்து விஐடி நாட்​டின் முதல் 20 பல்​கலைக்​கழகங்​களில் ஒன்​றாக உள்​ளது. நடப்​பாண்​டில் பல்​கலை. வரிசை​யில் 14-வது இடத்​தி​லும், ஆராய்ச்சி வரிசை​யில் 14-வது இடத்​தி​லும், பொறி​யியல் வரிசை​யில் 16-வது இடத்​தி​லும், ஒட்​டு மொத்ததர வரிசை​யில் 21-வது இடத்​தி​லும் உள்​ளது” என்​றார்.

விஐடி துணைவேந்​தர் காஞ்​சனா பாஸ்​கரன், ரமணி பாலசுந்​தரம், செயல் இயக்​குநர் சந்​தியா பென்​டரெட்​டி, இணை துணை வேந்​தர் பார்த்​த​சா​ரதி மல்​லிக், பதி​வாளர் ஜெய​பாரதி ஆகி யோர் உடனிருந்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x