Published : 14 Oct 2025 07:01 AM
Last Updated : 14 Oct 2025 07:01 AM

சைபர் பாதுகாப்பு துறையில் பட்டப் படிப்பு அறிமுகம்: சென்னை விஐடி, ஆஸ்திரேலிய பல்கலை. ஒப்பந்தம் 

ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சைபர் பாதுகாப்பு துறையில் புதிய பட்டப்படிப்பை சென்னை விஐடி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், டீகின் பல்கலைக்கழக இணை முதல்வர் பாஸ்கரன் ஆகியோர் கையொப்பமிட்டு பரிமாறிக்கொண்டனர்.

சென்னை: சைபர் பாது​காப்பு துறை​யில் புதிய பட்​டப் படிப்​பை, சென்னை விஐடி மற்​றும் ஆஸ்​திரேலி​யா​வின் டீகின் பல்​கலைக்​கழகம் இணைந்து அறி​முகப்​படுத்​தி​யுள்​ளன. உயர்​கல்​வி​யின் தரத்தை மேம்​படுத்​து​வதற்​காக, பல்​வேறு புதிய முன்​னெடுப்​பு​களை விஐடி கல்வி நிறு​வனம் மேற்​கொண்டு வரு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக, ஆஸ்​திரேலி​யா​வின் டீகின் பல்​கலைக்​கழகத்​துடன் இணைந்து சைபர் பாது​காப்பு துறை​யில் புதிய படிப்பை சென்னை விஐடி அறி​முகம் செய்​துள்​ளது.

இதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் விஐடி துணைத் தலை​வர் ஜி.​வி.செல்​வம், டீகின் பல்​கலைக்​கழகத்​தின் இணை முதல்​வர் பாஸ்​கரன் ஆகியோர் கையொப்​பமிட்​டனர். இதன் மூலம், சென்னை விஐடி​யில் இருந்து கணினி அறி​வியல் மற்​றும் பொறி​யியல் (சைபர் பாது​காப்​பு) பட்​டம், டீகின் பல்​கலை.​யில் இருந்து இளநிலை சைபர் பாது​காப்பு (Bachelor of Cyber Security-Honours) பட்​டம் ஆகிய 2 படிப்​பு​களை மாணவர்​கள் கற்க முடி​யும்.

மாணவர்​கள் தங்​கள் படிப்பை முதலில் விஐடி​யில் தொடங்​கி, பின்பு டீகின் பல்​கலை.​யில் நிறைவு செய்​வர். மேலும், இந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தின் மூலம், பொறி​யியல், தகவல் தொழில்​நுட்​பம், கட்​டிடக்​கலை மற்​றும் கட்​டு​மான மேலாண்மை துறை​களில் ஒருங்​கிணைந்த முது​நிலை பட்​டப் படிப்​பு​களும் வழங்​கப்​படு​கின்​றன.

இந்த நிகழ்​வில், விஐடி துணைத்தலை​வர் ஜி.​வி.செல்​வம் பேசுகை​யில், “ஆசிரியர் மற்​றும் மாணவர் பரி​மாற்​றம் உள்​ளிட்ட பல்​வேறு விவ​காரங்​களில் டீக்​கின் பல்​கலைக்​கழகத்​துடன் விஐடி பல்​கலைக்​கழகம் இணைந்து செயல்​பட்டு வரு​கிறது. இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம் மாணவர்​கள் ஒரே துறை​யில் இரண்டு பட்​டங்​களைப் பெறலாம். சைபர் பாது​காப்பு துறை​யில் எதிர்​காலத்தை வடிவ​மைக்​கும் திறனுள்ள, தொழில்​நுட்ப நிபுணர்​களை உரு​வாக்​கும் வகை​யில் இந்த பட்​டப் படிப்பு வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது’என்று தெரி​வித்​தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x