Published : 04 Oct 2025 06:37 AM
Last Updated : 04 Oct 2025 06:37 AM

போக்குவரத்து விதிகளை மாணவர்கள் மதிக்க வேண்டும்: தோல் ஏற்றுமதி குழும மேலாண் இயக்குநர் அறிவுரை

‘கலாம் சபா' நூலகம் சார்பில் சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் அண்மையில் நடைபெற்ற 8-வது மாதாந்திர வழிகாட்டி கூட்டத்தொடரில் பங்கேற்ற மாணவர்களுக்கு ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, தோல் ஏற்றுமதி குழு மேலாண் இயக்குநர் இரா.செல்வம் ஆகியோர் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர். | படம்: ச.கார்த்திகேயன் |

சென்னை: ‘​மாணவர்​கள் போக்​கு​வரத்து விதி​களை மதிக்க வேண்​டும். விதி மீறலால் உயி​ரிழப்​பு, பொருளா​தார இழப்பு ஏற்படுகிறது’ என்று தோல் ஏற்​றுமதி குழும மேலாண் இயக்​குநர் இரா.செல்​வம் அறி​வுறுத்தி உள்​ளார். சென்னை வியாசர்​பாடி மல்​லிகைப்பூ காலனி​யில் பிறந்​தவர் ராணுவ விஞ்​ஞானி டில்​லி​பாபு.

இவர் தனது இல்​லத்​தில் பள்​ளி, கல்​லூரி மாணவ, மாண​வியர்​களுக்​கான ‘கலாம் சபா’ என்ற நூல​கம் மற்​றும் வழி​காட்டி மையத்தை நிறு​வி​யுள்​ளார். இதை விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை கடந்த ஆண்டு திறந்​து​வைத்​தார்.

‘கலாம் சபா’ நூல​கம் சார்​பில் மாதாந்​திர வழி​காட்டி கூட்​டத்​தொடரை​யும் டில்​லி​பாபு நடத்தி வரு​கிறார். அதில் சிறந்த ஆளு​மை​கள் வரவழைக்​கப்​பட்​டு, அவர்​களு​டன் கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நடத்​தப்​படு​கிறது. அதன் 8-வது நிகழ்​வாக அக்​.1-ம் தேதி ‘ஹார்​வர்டு நாட்​கள்’ என்ற தலைப்​பில் கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதில், தோல் ஏற்​றுமதி குழு மேலாண் இயக்​குநர் இரா.செல்​வம் பங்​கேற்​று, அவர் எழு​திய ‘ஹார்​வர்டு நாட்​கள்’ நூலில் போக்​கு​வரத்து விதி​மீறல் குறித்து எழு​தி​யது தொடர்​பாக விஞ்​ஞானி டில்​லி​பாபு எழுப்​பிய கேள்வி​களுக்கு பதில் அளித்து பேசி​ய​தாவது: உலக நாடு​களில் வனப்​பகு​தி​யில் விலங்​கு​களைப் பாது​காப்​ப​தற்​காக வாக​னங்​களை வனக் காவலர்​கள் தடுத்து நிறுத்​து​வார்​கள்.

ஆனால் இந்​தி​யா​வில்​தான் மக்​களைப் பாது​காப்​ப​தற்​காக, வாக​னங்​களை தடுத்து நிறுத்​தும் சூழல் நில​வு​கிறது. விதி மீறலால் உலக அளவில் ஏற்​படும் 10 மரணங்​களில் ஒரு மரணம் இந்​தி​யா​வில் நிகழ்​கிறது. எனவே, மாணவர்​கள் போக்​கு​வரத்து விதி​களை மதிக்க வேண்​டும். போக்​கு​வரத்து விதி​மீறலால் உயி​ரிழப்​பும், பொருளா​தார இழப்​பும் ஏற்​படு​கிறது.

கல்​வி, திறமை, அறிவை வளர்ப்​ப​தில்​தான் முந்தி செல்ல முயல வேண்​டும். போக்​கு​வரத்து விதி​களை மதிக்க வேண்​டும் என்ற உணர்​வு, மற்​றவர் நிர்​பந்​திக்​காமல் உங்​களுக்​குள் எழ வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் டில்​லி​பாபு​வின் தந்​தை​யும், தொழிற்​சங்​க​வா​தி​யும், ‘மிஸ்​டர் மெட்​ராஸ்’ பட்​டம் வென்​றவரு​மான ச.விஜயகு​மார், ‘ஆளுமை சிற்​பி’ மாத இதழ் ஆசிரியர் மெ.​ஞான​சேகர் உள்​ளிட்​டோர் கலந்​துகொண்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x