Published : 01 Oct 2025 06:54 AM
Last Updated : 01 Oct 2025 06:54 AM

கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் வயது வரம்பு அதிகரிப்பு

சென்னை: இந்த ஆண்டு முதல், கலை அறி​வியல் கல்​லூரி​களில் இளநிலை படிப்​பு​களில் (பிஏ, பிஎஸ்​சி) சேரு​வதற்​கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்​கள் மற்​றும் இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினருக்கு 43 ஆகவும் உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசின் உயர்​கல்​வித் துறை செயலர் பொ.சங்​கர் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தற்​போது, கலை அறி​வியல் கல்​லூரி​களில் இளநிலை பட்​டப் படிப்​பு​களில் (பிஏ, பிஎஸ்​சி,பிசிஏ, பி.​காம், பிபிஏ, பிபிஎம் போன்​றவை) சேரு​வதற்​கான வயது வரம்பு 21 ஆக இருந்து வரு​கிறது. மாற்​றுத் திற​னாளி​களுக்கு 5 ஆண்​டு​களும், எஸ்​சி, எஸ்​டி, எம்​பிசி, பிசி, பிசி-​முஸ்​லிம் ஆகிய இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினருக்​கும், பெண்​களுக்​கும் 3 ஆண்​டு​கள் வயது வரம்​பில் தளர்வு அளிக்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நடப்பு கல்வி ஆண்​டில் (2025-2026) மாணவர்​களின்​ நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவி​பெறும், மற்​றும் சுயநிதி கலை அறி​வியல் கல்​லூரி​களில் இளநிலை பட்​டப்​படிப்பு சேர்க்​கைக்​கான உச்ச வயது வரம்பை அனைத்து பிரிவு மாணவர்​களுக்​கும் 40 என நிர்​ண​யித்து ஆணை வழங்​கு​மாறு கல்​லூரி கல்வி ஆணை​யர் அரசை கேட்​டுக்​கொண்​டுள்​ளார்.

இதுதொடர்​பான கல்​லூரி கல்வி ஆணை​யரின் கருத்​துருவை ஆய்வு செய்து 2025-2026-ம் கல்வி ஆண்​டு​ முதல் அரசு, அரசு உதவி​பெறும் மற்​றும் சுயநிதி கலை அறி​வியல் கல்​லூரி​களில் இளநிலை பட்​டப்​படிப்பு சேர்க்​கைக்​கான அதி​கபட்ச வயது வரம்பு 40 ஆகவும், மாற்​றுத் திற​னாளி​களுக்கு மேலும் 5 ஆண்​டு​கள் வயது தளர்​வும் (45 வயது வரை), இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினர் மற்​றும் பெண்​களுக்கு மேலும் 3 ஆண்​டு​கள் வயது தளர்​வும் (43 வயது வரை) அளித்து அரசு உத்​தர​விடப்​படு​கிறது. இவ்​வாறு அரசாணை​யில் கூறப்​பட்​டு உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x