Published : 27 Sep 2025 06:07 AM
Last Updated : 27 Sep 2025 06:07 AM

காலாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: ​காலாண்டு விடு​முறை​யில் தனி​யார் பள்​ளி​கள் சிறப்பு வகுப்​பு​கள் நடத்​தக் கூடாது என்று பள்​ளிக்​கல்​வித் துறை அறிவுறுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் அரசு, அரசு உதவி மற்​றும் தனி​யார் பள்​ளி​களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஆண்​டு​தோறும் செப்​டம்​பர் மாதம் காலாண்​டுத் தேர்வு நடத்​தப்​படும்.

அந்​தவகை​யில் நடப்பு கல்​வி​யாண்​டில் காலாண்​டுத் தேர்​வு​கள் கடந்த 10-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் முடிவடைந்​தன. இதையடுத்து மாணவர்​களுக்கு காலாண்டு விடு​முறை இன்று (செப்​.27) முதல் அக்​டோபர் 5-ம் தேதி வரை விடப்​பட்​டுள்​ளது. இந்த விடு​முறை முடிந்து பள்​ளி​கள் மீண்​டும் அக்​.6-ம் தேதி திறக்​கப்பட இருக்​கின்​றன.

இந்​நிலை​யில் காலாண்டு விடுப்​பில் தனி​யார் பள்​ளி​கள் சிறப்பு வகுப்​பு​கள் நடத்​தக் கூடாது என்று பள்​ளிக்​கல்​வித்துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​படி, விடு​முறை நாட்​களில் சிறப்பு வகுப்​பு​கள் நடத்​தப்​ப​டா​மல் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

அவற்றை மீறும் பள்​ளி​கள் மீது துறைரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும் என மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. எனினும், சென்னை உட்பட சில மாவட்​டங்​களில் தனி​யார் பள்​ளி​கள் சிறப்பு வகுப்​பு​களுக்​கான கால அட்​ட​வணையை வெளி​யிட்​டுள்​ள​தாக​வும் தகவல்​கள்​ வெளி​யாகி​யுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x