Published : 27 Sep 2025 05:49 AM
Last Updated : 27 Sep 2025 05:49 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு 3-ம் சுற்று கலந்தாய்வு அக். 6 முதல் தொடக்கம்

கோப்புப்படம்

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான மூன்​றாம் சுற்று கலந்​தாய்வு அக். 6-ம் தேதி தொடங்​கு​கிறது. தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரிகளில் உள்ள அரசு, நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான கலந்​தாய்வை மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) நடத்​துகிறது.

அதன்​படி, இரண்டு சுற்று கலந்​தாய்வு முடி​வில் காலி​யாக​வுள்ள இடங்​கள், மாணவர்​கள் சேராத​தால் ஏற்​படும் காலி​யிடங்​கள் மற்​றும் கூடு​தலாக சேர்க்​கப்​பட்​டுள்ள இடங்​களுக்​கான மூன்​றாம் கட்ட கலந்​தாய்வு அக்​.6-ம் தேதி ஆன்​லைனில் தொடங்​க​வுள்​ளது. அரசு நிர்​ண​யித்த கட்​ட​ணத்​தை​விட கூடு​தலாக வசூலிக்​கும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும் என்று அரசு அறி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x