Published : 25 Sep 2025 05:54 AM
Last Updated : 25 Sep 2025 05:54 AM

பிப்.17 முதல் ஏப்.9-ம் தேதி வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 

சென்னை: சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்​கான பொதுத்​தேர்வு கால அட்​ட​வணையை சிபிஎஸ்இ வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி 10-ம் வகுப்​புக்​கான பொதுத்​ தேர்​வு​கள் பிப்​.17-ல் தொடங்கி மார்ச் 9-ம் தேதி முடிவடை​யும். அதே​போல், 12-ம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்​வு​கள் பிப்​ர​வரி 15 தொடங்கி ஏப்​ரல் 9-ம் தேதி முடிவடை​யும்.

இதுத​விர தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி பத்​தாம் வகுப்​புக்கு மட்​டும் நடப்​பாண்டு முதல் இரு பொதுத்​தேர்​வு​கள் நடத்​தப்பட உள்​ளன. முதல்​கட்​ட​மாக பிப்​ர​வரி மாத​மும், 2-ம்​ கட்​ட​மாக மே மாத​மும் தேர்​வு​கள் நடை​பெறும்.

அந்​த வகை​யில் 10-ம் வகுப்​புக்​கான 2-ம் ​கட்ட பொதுத் தேர்வு மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடை​பெறும். ஒட்​டுமொத்​த​மாக இந்த தேர்​வு​களை சுமார் 45 லட்​சம் பேர் எழுதவுள்​ளனர்.

ஒவ்​வொரு பாடத் தேர்வு நடை​பெற்று முடிந்த 10 நாட்​களில் அதற்​குரிய விடைத்​தாள்​கள் திருத்​துதல் பணி​கள் தொடங்​கும். விரி​வான தேர்வு கால அட்​ட​வணை உட்பட கூடு​தல் விவரங்​களை மாணவர்​கள் சிபிஎஸ்இ இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம் என்று சிபிஎஸ்இ தேர்​வுக் கட்​டுப்​பாட்டு அலு​வலர் ஷவ்​யம் பரத்​வாஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x