Published : 24 Sep 2025 01:20 AM
Last Updated : 24 Sep 2025 01:20 AM

தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு

சென்னை: நாடு முழு​வதும் 10, 12-ம் வகுப்​பு​களுக்​கான பொதுத் தேர்​வு​கள் அக்​டோபர் 14 முதல் நவம்​பர் 18-ம் தேதி வரை நடை​பெறும் என்று தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம் தகவல் தெரி​வித்​துள்​ளது.

மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம், பள்​ளிக் கல்​வியை தொலைநிலை வழி​யில் பயிற்​று​வித்து வரு​கிறது. அதனுடன், திறன் மேம்​பாட்​டுக்​கான தொழிற் படிப்​பு​களை​யும் வழங்​கு​கிறது. அந்த வகை​யில், நாடு முழு​வதும் சுமார் 24 லட்​சம் மாணவர்​கள் இதன் வாயி​லாக பலன்​பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், 10, 12-ம் வகுப்​பு​களுக்​கான பொதுத் தேர்​வுக்​கால அட்​ட​வணையை தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம் தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, பொதுத் தேர்​வு​கள் வரும் அக். 14-ல் தொடங்கி நவ. 18-ம் தேதி வரை நடை​பெறும். இந்த தேதி​களில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​ப​டாது. விரி​வான தேர்​வுக்​கால அட்​ட​வணையை மாணவர்​கள் nios.ac.in எனும் வலை​தளத்​தில் அறிந்து கெள்​ளலாம்.

மேலும், ஹால்​டிக்​கெட்​கள் தேர்​வு​களுக்கு சில நாட்​களுக்கு முன்பு வெளி​யிடப்​படும். பொதுத் தேர்​வு​களின் முடிவு​கள் தேர்வு முடிந்த 7 வாரங்​களுக்​குள் அறிவிக்​கப்​படும் என்​று, தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம் சார்​பில் வெளி​யான அறி​விப்​பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x