Published : 24 Sep 2025 01:03 AM
Last Updated : 24 Sep 2025 01:03 AM

கணினி சான்றிதழ் தேர்வு: தேர்ச்சி சான்றிதழை செப்​.26 வரை பெறலாம்

சென்னை: அரசு கணினி சான்​றிதழ் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்​வர்​கள், மண்டல விநி​யோக மையங்​களில் செப்​.26-ம் தேதி வரை தேர்ச்சி சான்​றிதழை நேரில் பெற்​றுக் கொள்​ளலாம்.

‘கோ​வா’ எனப்​படும் அரசு கணினி சான்​றிதழ் தேர்​வு, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​கத்​தால் ஆண்​டுக்கு 2 தடவை நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், 2024 ஆகஸ்ட் பருவ கணினி சான்​றிதழ் தேர்வு ஜூன் மாதம் நடத்​தப்​பட்டு தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன.

இத்​தேர்​வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்​வர்​கள் சம்​பந்​தப்​பட்ட மாவட்ட மண்டல விநி​யோக மையங்​களில் உரிய ஆதா​ரங்​களை (அடை​யாள சான்​று, ஹால்​டிக்​கெட், ஆதார் அட்​டை) காண்​பித்து செப்​.26-ம் தேதி வரை நேரடி​யாக பெற்​றுக் கொள்​ளலாம் என்றுதொழில்​நுட்​பக் கல்வி இயக்கக உதவி இயக்​குநர் (தேர்​வு​கள்) கே.பிர​பாகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x