Published : 18 Sep 2025 06:18 AM
Last Updated : 18 Sep 2025 06:18 AM

பள்ளி வளாகங்களில் மழை முன்னெச்சரிக்கை: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை: ‘பள்ளி வளாகங்​களில் மழைக்​கான முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும்’ என்று பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் சென்​னை, திருச்​சி, அரியலூர், தஞ்​சாவூர், உட்பட பல்​வேறு மாவட்​டங்​களில்பரவலாக மழை பெய்து வரு​கிறது. வரும் நாட்​களி​லும் மழைநீடிக்க வாய்ப்​புள்​ள​தாக வானிலை மையம் கூறியுள்​ளது.

மேலும், மழைநீர் பாதிப்​பால் மதுரை, கோவை, சென்னை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் வைரஸ் காய்ச்​சல் பரவலும் அதி​கரித்​துள்​ளது. இதனால் பொது​மக்​கள் கவன​முடன் இருக்க சுகா​தா​ரத்​துறை எச்​சரித்​துள்​ளது. இதற்​கிடையே சில மாவட்​டங்​களில் உள்ள பள்ளி வளா கங்​களில் மழைநீர் தேங்​கி​யுள்​ள​தாக பள்​ளிக்​கல்​வித் துறைக்கு புகார்​கள் வந்​தன. இதையடுத்து பள்ளி வளாகங்​களில் மழைக்​கான முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை முறை​யாகப் பின்​பற்ற வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அறிவுறுத்தியுள்​ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் வழங்​கப்​பட்​டுள்ள அறி​வுறுத்​தல்​கள் வரு​மாறு: பரு​வ​மழைக் காலங்​களில் கடைபிடிக்க வேண்​டிய வழி​காட்​டு​தல்​கள் ஏற்​கெனவே பள்​ளி​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி பள்​ளி​களில் மின் இணைப்​பு​களை சரி​பார்த்​தல், திறந்​தவெளி கிணறுகள், கழி​வுநீர் தொட்​டிகளை மூடு​தல் என மாணவர்​களின் பாது​காப்​புக்​கு உரிய அம்​சங்​களை முழு​மை​யாகப் பின்​பற்ற வேண்​டும். பள்ளி வளாகங்​களில் தண்​ணீர் தேங்​காமல் இருப்​பதை உறு​தி​செய்ய வேண்​டும்.

பரு​வ​கால மாற்​றங்​களால் மாணவர்​களுக்கு ஏற்​படும் நோய்​களில் இருந்து பாது​காத்​துக் கொள்​வதற்​கான அறி​வுரைகள் வழங்க வேண்​டும். காய்ச்​சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்​களை அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்று சிகிச்சை வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட வழி​காட்​டு​தல்​களை தலைமை ஆசிரியர்​கள் முழு​மை​யாகப் பின்​பற்றி செய்ய வேண்​டும்​. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x